வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம்: 5-ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு
வரட்டுப் பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 5-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வரட்டுப் பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 5-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனையேற்று வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு விநாடிக்கு 90.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மார்ச் 5 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் அந்தியூர் வட்டத்திலுள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.