தமிழ்நாடு

ரேடியோதெரப்பி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு மருத்துவமனைகளில் ரேடியோதெரப்பி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு அரசு மருத்துவமனகளில் 25 காலிப் பணியிடங்கள் உள்ளன. தாற்காலிக முறையில் பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். ரேடியோதெரப்பி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.500 ஆகும். தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்), பழங்குடியினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேரடி பணி நியமனம் நடைபெறும், எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 26ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT