தமிழ்நாடு

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்த சரக்கு கப்பல்: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

DIN

குஜராத் மாநிலத்தில் இருந்து பாம்பன் வந்த பெரிய சரக்கு கப்பல், ரயில் தூக்கு பாலத்தை வியாழக்கிழமை கடந்து சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
குஜராத் மாநிலம், பரூக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 77 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் புதன்கிழமை பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. ரயில் தூக்கு பாலம் திறந்து இந்தக் கப்பல் கொல்கத்தா செல்ல பாம்பன் துறைமுக கழக அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.
இதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தையடுத்து, வியாழக்கிழமை பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு சரக்கு கப்பல் கொல்கத்தாவுக்கு சென்றது. 77 மீட்டர் நீளமுள்ள கப்பல் பாலத்தை கடந்து சென்றதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT