சென்னை: என்னை வைத்து மீம்ஸ் போடும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமை பொங்கத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவியாக அரசியலில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சமூக வலைதளங்களில் அவருடைய தோற்றத்தை வைத்து அதிக அளவில் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகி வருகிறார்.
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிசை பதிலளித்துளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஊர் பணத்தை சுருட்டியவர்களை எல்லாம் மீம்ஸ் போடுபவர்கள் விட்டுவிடுகிறார்கள். ஆனால் சுருட்டை முடி வைத்து இருக்கிறேன் என்று என்னை விடுவது கிடையாது. இதற்காகவே இப்போது எல்லாம் நான் ஒழுங்காக தலைமுடியை சீவி வருகிறேன்.
அத்துடன் என்னையும் வடிவேலுவையும் கூட இணைந்து மீம்ஸ் போடுகிறார்கள். இதில் ஒற்றுமை என்னவென்றால் என்னுடைய வீடும், வடிவேலுவின் வீடும் அருகருகேதான் உள்ளது. மற்றொரு விஷயம் என்னை வைத்து மீம்ஸ் போடும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன்.
இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.