தமிழ்நாடு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடிகர் அஜித் நேரில் அஞ்சலி! 

சென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

DIN

சென்னை: சென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராவிதமாக மரணம் அடைந்தார்.பின்னர் நடைபெற்ற விசாரணையில் தான் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்ததாக பிரதேச பரிசோதனையில் தெரியவந்தது.

பின்னர் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், மும்பையில் ரசிகர்களின் அஞ்சலிக்குப் பின்னர் எரியூட்டபட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் 16-ஆவது நாள் மரண சடங்குகள் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்த் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிலொருவராக நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவர்தம் குடும்பத்ததாருக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT