தமிழ்நாடு

கன்னியாகுமரி,  நாகர்கோவிலில் கன மழை

DIN

இந்தியக் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி , நாகர்கோவில், மார்தாண்டம் உள்ளிட்டப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:

தெற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வெள்ளிக்கிழமை உருவானது.

இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு அருகே நீடிக்கும். இதன் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.

மேலும்  குமரிக்கடல்  பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுவீசக் கூடும். 
எனவே மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் அடுத்த 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT