தமிழ்நாடு

நீட் தேர்வு: தமிழக அரசு வழக்கு தொடர திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

DIN

நீட் தேர்வை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணித்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தின. அதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடந்தது. இதில் 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளது.
ஒற்றைச் சாளர முறையில் அனுமதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 2016-இல் 4,222-ஆக இருந்தது; இது 2017-இல் 3,546-ஆகக் குறைந்துள்ளது.இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டும் வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்திருந்தும் அதிமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
அதே நேரத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குதேசக் கட்சியினர் உரிமைகளுக்காக போராடுவதற்குப் பயந்து, பாஜக அவர்களோடு சமரசம் செய்துகொள்ள முயற்சிக்கிறது. ஆனால், அதிமுக அரசை மத்திய பாஜக அரசு அலட்சியத்துடன் செயல்படுத்துகிறது.
எனவே, நீட் தேர்வினால், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு உரிய முறையில் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT