தமிழ்நாடு

அவர் நமக்களித்த ஞானத்தை என்றும் நினைவில் கொள்வோம்: ஸ்டீபன் ஹாக்கிங்க்கு கமல் அஞ்சலி! 

DIN

சென்னை: ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நமக்களித்த ஞானத்தை என்றும் நினைவில் கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியும், பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) புதனன்று காலை காலமானார். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963-ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், நாற்காலியிலிருந்தபடியே குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு மற்றும் பிரபஞ்ச கருங்குழி கோட்பாடு உள்ளிட்டவற்றை உருவாக்கியவர். இவர் இங்கிலாந்த்தின் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

இவரது மரணத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நமக்களித்த ஞானத்தை என்றும் நினைவில் கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் . அவர் புகழ் வாழும்.' என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT