தமிழ்நாடு

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

DIN

தென்மேற்குப் பருவமழை எதிரொலியால், சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து வியாழக்கிழமை அதிகமாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், கடந்த 20 நாள்களாக அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லை. 
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வன விலங்குகள், மரம், செடி, கொடிகளின் நீர்த் தேவைகளுக்காக, சுருளி அருவிக்கு தண்ணீர் தரும் மணலார் அணையிலிருந்து 10 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டது. இதனால், அருவியில் தண்ணீர் குறைவாக வந்து விழுந்தது. 
இதனிடையே, தென்மேற்குப் பருவமழை திடீரென பெய்ததால், மணலார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக, சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
வியாழக்கிழமை சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT