தமிழ்நாடு

உணவு தானிய உற்பத்தியில் சாதனை: தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது வழங்கினார் பிரதமர்

UNI


புது தில்லி: 2015-16ம் ஆண்டில் நாட்டிலேயே உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தமைக்காக தமிழக அரசுக்கு கிரிஷி கர்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புது தில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சர் ரிசர்ச் மையத்தில் நடைபெற்ற கிரிஷி உன்னதி திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதினை வழங்கினார்.

இந்த விருது என்பது ஒரு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.5 கோடி நிதியுடன் கூடியதாகும். கடந்த 2015-16ம் ஆண்டில் பயிர்கள் மட்டும் அல்லாமல், பருப்பு மற்றும் வரகு போன்ற சிறுதானிய விளைச்சலிலும் தமிழகம் சாதனை படைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளும் தனித்தனியே கௌரவிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஆர். ராசாத்தி மற்றும் நெல்லை மாவட்டம் சாமிநாதன் ஆகியோருக்கு பிஷாஷ்தி பத்திரத்துடன் ரூ.2 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது. ஒரு ஹெக்டேருக்கு 9,563 கிலோ உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT