தமிழ்நாடு

ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள்: மனம் வெதும்பிய நாஞ்சில் சம்பத்! 

DIN

சென்னை: ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் டி.டி.வி.தினகரன் மதுரையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற புதிய அமைப்பைத் துவக்கி, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமையன்று பெயரிலேயே அண்ணா மற்றும் திராவிடம் இரண்டையும் கைவிட்ட  டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அத்துடன் இனி இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். இலக்கிய மேடைகளில் என்னை அதிகம் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல தினகரன் அணியில் என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாகவும்,  தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.

அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT