தமிழ்நாடு

படத்தொகுப்பாளர் அனில் மல்னாட் காலமானார்

DIN

திரைப்படத் தொகுப்பாளர் அனில் மல்னாட் (60) உடல் நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான 'சித்தாரா' படத்திற்காக தேசிய விருது பெற்ற அனில் மல்னாட் 'கிழக்கு வாசல்', 'அய்யா வழி' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். 
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அவர், 600 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ஆந்திர அரசின் 'நந்தி' விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரம், நெல்லையப்பர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று இறுதிச் சடங்கு: அனில் மல்னாட்டின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை காலை குரோம்பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT