தமிழ்நாடு

முதுநிலை மருத்துவம்: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்யும் வசதி

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (மார்ச் 23) கடைசியாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை உறுதி செய்யும் வசதி இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். விண்ணப்பித்தோர் தங்களின் பதிவு எண் அல்லது 2018 நீட் தேர்வின் பதிவு எண்ணை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை... பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வுக் குழுக்கு அனுப்ப மார்ச் 26-ஆம் தேதி கடைசியாகும். கலந்தாய்வுக்கான தகுதிப் பட்டியல் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியிடப்படும். முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்பு, தமிழக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT