தமிழ்நாடு

முதலில் நியமனம்...பிறகு நீக்கம்; ஆதரவாளர்கள் ராஜிநாமா: களைகட்டும் ரஜினி மன்றம்! 

விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 

DIN

சென்னை: விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 

விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் ஆரம்ப கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமனம் செய்வதில் செயலாளர் ராஜு மகாலிங்கமும், நிர்வாகி வி.எம்.சுதாகரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 27–ந்தேதி சென்னையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 15–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியானது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கபட்டுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதினால் அவர் ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT