தமிழ்நாடு

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: அதிமுகவுக்கு இ.கம்யூ வலியுறுத்தல்

தினமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் மீது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இந்த நிலையில், மத்திய அரசு கூட்டிய அதிகாரிகள் கூட்டத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு கூறியுள்ளது' என்று நீர்வளத் துறைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
 ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி "உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள காலக் கெடுவுக்குள் வாரியத்தை அமைப்பது சாத்தியமில்லை' என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையில் மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தை வஞ்சிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்துக்கு போக்குக்காட்டி இழுத்தடிப்பதாகவும் அமைந்துள்ளது. எனவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆளும்கட்சியான அதிமுக அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT