தமிழ்நாடு

என்னது ஒரு டீ 135 ரூபாயா?: ஆச்சர்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்! 

சென்னை விமான நிலையத்தில் டீ ஒன்று ரூ.135க்கும், காபி ஒன்று ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவது கண்டு தான் வியப்படைவதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளா

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் டீ ஒன்று ரூ.135க்கும், காபி ஒன்று ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவது கண்டு தான் வியப்படைவதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிறு காலை தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் செய்திருந்தார். அதில் முதலாவது பதிவில் அவர் தெரிவித்திருந்தாதவது:

சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபி டே'வில் டீ கேட்டேன். சுடு தண்ணீரும், டீ பையும் கொடுத்தனர், விலை ரூ.135. அதிர்ச்சியடைந்து, வாங்க மறுத்துவிட்டேன். அது சரியா? தவறா?.

அடுத்ததாக இரண்டாவது பதிவொன்றையும் அவர் செய்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

காபி ரூ.180. அதை யார் வாங்குவார்கள் என கேட்டேன். அதற்கு ‘பலர்’ என பதில் வந்தது. நான் பழைமையாகி விட்டேனோ?.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நெடுங்காலமாக இருந்து வரும் இந்த நடைமுறை பற்றி சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதள வாசிகளிடம் கலவையான விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT