முகப்பு
தமிழ்நாடு

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம்: அதிமுக எம்பிக்கள் 

காவிரி மேலாண்மை விவகாரத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிமுக எம்பிக்கள் அறிவித்துள்ளனர். 

Updated On : 29 மார்ச், 2018 at 3:49 PM
பகிர்:

காவிரி மேலாண்மை விவகாரத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிமுக எம்பிக்கள் அறிவித்துள்ளனர். 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வோம் என்று அதிமுக எம்பிக்களான குமார், அருண்மொழிதேவன் ஆகியோர் அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று முதல்வரை சந்தித்த அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். 

முன்னதாக காவிரி மேலாண்மை விவகாரத்தில் தற்கொலை செய்யயும் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.