சட்டப் பல்கலைக்கழகம்: புதிய பதிவாளர் பொறுப்பேற்பு
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ள சங்கர், குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத் துறையின் தலைவராக ஏற்கெனவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பொறுப்பேற்ற டி.எஸ்.என்.சாஸ்திரி, புதிய பதிவாளர் (பொறுப்பு) நியமன உத்தரவைப் பிறப்பித்தார்.
நான்கு பேர் விடுவிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கே.எஸ்.சர்வானி, வி.பாலாஜி, எஸ்.கே.அசோக்குமார், டி.ஜெய்சங்கர் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த அனைத்து நிர்வாகப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.