மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்
மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுரை: மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருப்பதை, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் மதுரையிலேயே அவசரமாக தரையிறக்கினார். இதனால் அந்த விமானத்தில் இருந்த 75 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
Advertisement
என்ஜினில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டு பகல் 12.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.