தமிழ்நாடு

என்னை அறியாமல் அஜித் பிறந்தநாள் வாழ்த்து பதிவு: அமைச்சர் செங்கோட்டையன்

நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன்விளக்கமளித்துள்ளார். 

Raghavendran

நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் அஜித் 1971-ஆம் வருடம் மே 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

திரைப்படம் மட்டுமின்றி கார் மற்றும் பைக் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஃபார்முலா 3 கார் பந்தயத்தில் பங்கேற்றவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2012-ஆம் ஆண்டு 61-ஆவது இடத்தைப் பெற்றார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் 51-ஆவது இடம்பிடித்தார். அதுபோல 2013-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகராகவும் உள்ளார். 

நடிகை ஷாலினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் உள்ளனர். இன்று இவர் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல தரப்பிலும் அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையனின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே தன்னை அறியாமல் அது பதிவிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

SCROLL FOR NEXT