தமிழ்நாடு

ஏற்காடு கோடை விழா மே 12-இல் தொடக்கம்: முதல்வர் பங்கேற்பு

DIN

சேலம் ஏற்காட்டில் 43-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை மே 12- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மே 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 43-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியர் பேசியது: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மே 12-ஆம் தேதி 43-ஆவது ஏற்காடு கோடை விழாவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். விழாவில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு மலர்க் கண்காட்சி தோட்டக்கலைத் துறையின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், காய்கறிக் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. கோடை விழாவில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நாய்க் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT