தமிழ்நாடு

கோத்தகிரியில் 10-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது 

கோடை விழாவின் தொடக்கமாக நீலகிரி மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள்..

ஏ. பேட்ரிக்


கோடை விழாவின் தொடக்கமாக நீலகிரி மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 10-ஆவது ஆண்டு காய்கறிக் கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் சனிக்கிழமை (மே 5) இன்று காலை தொடங்கியது. 

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் இரண்டு நாள்கள் காய்கறிக் கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தலைமை வகிக்கிறார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 10-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 500 கிலோ கத்திரிக்காய்களினால் ஆன பிரமாண்ட நந்தி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று காய்கறிகளைக் கொண்டு பார்பிகேள், காய்கறிகளைச் சந்தைக்கு எடுத்துச்செல்லும் மாட்டுவண்டி, நவீன நீலகிரியை உருவாக்கிய  ஜான் சலீவன் நினைவக மாதிரி ஆகியவற்றுடன் காய்கறிகளால் செல்பி ஸ்பாட் ஆகியவையும் 200 கிலோ எடை கொண்ட நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறையின் சார்பில் கோவை, திண்டுக்கல், தேனி, விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காய்கறி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இவற்றிற்கு திருச்சி மாவட்டத்தின் சார்பில் ரங்கநாதர் பள்ளிகொண்ட உருவச்சிலையும், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் மிக்கிமௌவுஸ், தேனி மாவட்டத்தின் சார்பில் டால்பினும், கோவை மாவட்டத்தின் சார்பில் மிளகாய் டால்பினும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. சிறந்த அரங்குகளுக்கு நாளை மாலை பரிசு அளிக்கப்படுகிறது. காய்கறி கண்காட்சியை காண பல்வேறு பகுதியில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT