தமிழ்நாடு

ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் 

DIN

சென்னை: ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது.இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.  அந்த வகையில் தமிழகத்தின் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். மகனைத் தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமி 'திடீர்' மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற இடத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர் கஸ்துரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT