தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ 6 லட்சம் கொள்ளை 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளையொன்று அமைந்துள்ளது. இந்தக் கிளையில் திங்களன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் வங்கியில் நுழைந்துள்ளது. அவர்கள் உடனடியாக வங்கியின் மேலாளர் கோவிந்தராசு மற்றும் காசாளர் உள்ளிட்ட ஊழியர்களை வங்கியில் இருந்த அறை ஒன்றில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அடைத்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.6 லட்சம் பணம்  மற்றும் அடமானம் வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் மேலாளர் மற்றும் சில ஊழியர்களை தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்பொழுது சம்பவம் நடந்த வங்கியில் காவல்துறையினர் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 5

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!

சினிமாவிலிருந்து ஓய்வுபெறும் நடிகை துளசி!

தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!

நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

SCROLL FOR NEXT