தமிழ்நாடு

நீட் விவகாரம்: தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 

நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

புதுதில்லி: நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் என்று பல விதங்களிலும் அலைக்கழிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு தேர்வெழுதச் சென்ற மகனுக்கு துணையாகச் சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார், அதேபோல் சிங்கம்புணரியில் மாணவி ஒருவரின் தந்தையும் மரணமடைந்தார். இது அனைத்துத் தரப்பிலும் பரவலான கண்டனங்களை எழுப்பியது.

இந்நிலையில் நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யாரும் புகார் கொடுக்காமலே செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே முன்வந்து இந்த நோட்டீசை மனித உரிமை ஆணையம் அனுப்பியிருக்கிறது.

இந்த நோட்டீஸுக்கு. இரண்டு தரப்பினரும் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT