காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்: ஸ்டாலின்
திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் வரும் மே 19ம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தேன். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பஜக தலைவர் தமிழிசை, வேல்முருகன், பாலகிருஷ்ணன், டிடிவி தினகரன் , நடிகர் ரஜினிகாந்தையும் அழைக்க உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்த கூட்டம் கூட்டணிக்காக அல்ல காவிரிக்காக தமிழர்கள் என்ற முறையில் ஓரணி திரள வேண்டும் என்றார்.
Advertisement
மேலும் என்னுடைய அழைப்பை ஏற்று அனைவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்
அண்டை மாநிலங்களில் அரசியலை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதேபோல காவிரி விவகாரத்தில் இங்கிருக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் மே 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளோம் .
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துபேசி மே 19ம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.