தமிழ்நாடு

தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்?: ப.சிதம்பரம் கிண்டல் 

இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம்  விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம்  விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

செவ்வாயன்று வெளியான கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதி இருந்தார். அதில் கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் வெற்றியை, "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என வர்ணித்திருந்தார்.

இந்நிலையில் இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம்  விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்?  இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT