தமிழ்நாடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின

Raghavendran

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. இதில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத் துறை செய்துள்ளது. பள்ளிகளுக்கும் மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 

ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் - 94.1 சதவீதம் மற்றும் மாணவர்கள் - 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

அதிகபட்சமாக விருதுநகர் - 97 சதவீதம் (முதலிடம்), ஈரோடு - 96.3 சதவீதம் (இரண்டாமிடம்), திருப்பூர் - 96.1 சதவீதம் (மூன்றாமிடம்) பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT