தமிழ்நாடு

மகளிர் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்: ரஜினிகாந்த் பேட்டி

Raghavendran

ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

ரஜினி மக்கள் மன்றத்துக்கு மகளிர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நான் தொடங்கவிருக்கும் கட்சியில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால் மகளிருக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகள் முன்னேறி இருக்கின்றன. அதுபோல மகளிர் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்.

தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். கட்சியே தொடங்காத போது கமலுடன் கூட்டணி குறித்து பேச முடியாது. நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்தாகும். ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் அதுபோன்று செய்திருக்கக் கூடாது.

அணைகளின் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கவேண்டும், கர்நாடகாவிடம் இருந்தால் நல்லதல்ல. காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவை ஆளப்போகும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் மதிக்க வேண்டும். மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை காரணமின்றி தடை விதிக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT