தமிழ்நாடு

ஆட்சியர் வளாகத்திற்குள் வன்முறை: போராட்டக்காரர்களில் ஒருவர் பலி

DIN

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த நிலையில், போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. 

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த நிலையில், தயார் நிலையில் இருந்த போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

போலீஸார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆட்சியர் அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியே போராட்ட களமாக மாறியுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றும் வரும் மோதலை படம்பிடிக்கும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் கேமாரக்களை போலீஸார் பறித்து விரட்டி அடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். 

ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கியும், தீயும் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்து புகைகள் வந்துகொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், ஆட்சியர் அலுவலக முற்றுகையின்போது போலீஸார் நடத்திய தாக்குதலில் போராட்டகாரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடல் மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்திற்குள் கிடக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT