தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணியாததால் தான் தமிழர்கள் படுகொலை - ராகுல் காந்தி தமிழில் ட்வீட் 

தமிழர்கள் ஆர்எஸ்எஸ் சிந்தாதத்திற்கு அடிபணிய மறுப்பதால் தான் படுகொலை செய்யப்படுவதாக ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.  

DIN

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது நேற்று (செவ்வாய்கிழமை) போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்தை அரச பயங்கரவாதம் என நேற்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் தனது அடுத்த ட்விட்டர் கருத்தை தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,     

"தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ்  சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன்  இருக்கிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT