தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்: பங்குச் சந்தையில் வேதாந்தா குழுமத்துக்கு சரிவு 

DIN

வேதாந்தா குழுமம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நேற்று இந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக மாறியது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 11 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே போராட்டம் அனைத்தும் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆலையின் உற்பத்தியை இரட்டிப்பாக்க போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், பங்குச் சந்தையில் வேதாந்த குழுமத்தின் பங்கு இன்று சரிவை கண்டுள்ளது. காலை 3.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி அதன் பங்கு - 5 சதவீதமாக சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT