தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு காவல்துறையின் மிருகத்தனமான செயல்: ரஜினி கண்டனம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல்துறையின் மிருகத்தனமான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைப்பெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டகாரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு, சட்டத்துக்கு புறம்பான வரம்பு மீறிய மிருகத்தனமான செயல், இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த துப்பாக்கிச்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தி ராமர் கோயிலில் திரௌபதி முர்மு வழிபாடு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT