தமிழ்நாடு

பெரியகுளம் பகுதியில் தொடர் மழை: சோத்துப்பாறை அணை நிரம்பியது

DIN

பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சோத்துப்பாறை அணை நிரம்பியது. 
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான ஒடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 
மேலும், வராக நதியில் 5 முறைக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. அதேநேரம், அகமலை மற்றும் பேரீச்சம் ஏரி பகுதியில் மழை பெய்துள்ளதால், சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 15 நாள்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், 3 கன அடி தண்ணீர் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அணையின் உயரம் - 126.31 அடி, நீர் மட்டம் 126 அடி, நீர்வரத்து - 7 கன அடி, நீர் வெளியேற்றம் - 3 கன அடி,  மழையளவு 6 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT