தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை போராட்டம்: பாமக அறிவிப்பு

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை பாமக சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படவிருக்கிறது.

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான பினாமி அரசு பதவி விலக வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (26.05.2018) சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. 

சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT