தமிழ்நாடு

மேலடுக்கு சுழற்சி: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தினமணி

மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
 தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கோ, பலத்த மழைக்கோ வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னல் காணப்படும். சென்னையில் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும். தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 100 மி.மீ. மழை பதிவானது. கூடலூர் பஜாரில் 80 மி.மீ., ஈரோடு மாவட்டம் பெருந்துறை, தாளவாடியில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
 திருத்தணியில் 100 டிகிரி: மேலடுக்கு சுழற்சி, தென் மேற்குப் பருவமழை சில பகுதிகளில் முன்கூட்டியே தொடங்கியது காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் சனிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. திருத்தணியில் 100 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT