தமிழ்நாடு

தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்!

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் எதிர்வலையை கிளப்பியது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கபட்டது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்தனர். 

தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளாக தமிழகத்தில் முதன்முறையாக இணையதளம் முடக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டமே மூன்று நாட்களுக்கு முற்றிலுமாக முடங்கியது. இது போன்ற பதற்றமான சூழல் படிப்படியாக குறைந்த நிலையில், 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அரசு சார்பாக முதன்முதலாக அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார். 

இந்த வரிசையில் இன்று காலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். 

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார். அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT