தமிழ்நாடு

புழல் சிறையில் வேல்முருகனுடன் வைகோ சந்திப்பு - உண்ணாவிரதம் வாபஸ்

வைகோ கூறியதையடுத்து புழல் சிறையில் உள்ள வேல்முருகன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

DIN

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

புழல் சிறையில் இருக்கும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அவர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.  

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வேல்முருகனுடன் 22 பேரும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேல்முருகனை சந்தித்தார். அப்போது, வைகோ கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை வேல்முருகன் வாபஸ் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT