தமிழ்நாடு

தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது 

தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

DIN

சென்னை: தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன் காவிரி மேலாண்மை வாரியமம் அமைக்க கோரி, நெய்வேலி சுரங்க ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்பொழுது கூடி இருந்த இளைஞர்கள் மத்தியிலஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகனை, அந்த வழக்கில் நெய்வேலி தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் புதன் இரவு கைது செய்தார்.

முன்னதாக இதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டம் ஒன்றில் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச் சாவடியினை உடைத்த வழக்கில் வேலுமுருகன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு காவல்துறை அதிகாரிகள் தன்னை நடத்திய விதம் கண்டு கோபம் அடைந்த வேல்முருகன் உண்ணா விரத போராட்டத்தில் இறங்கினார். பின்னர் சிறையில் தன்னை வந்து சந்தித்த வைகோவின் வேண்டுகோளுக்கு இணங்கி, உண்ணா விரத போராட்டத்தை கைவிட்டார்.

பின்னர் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது தேசத்துரோக வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT