தமிழ்நாடு

பி.எட். சிறப்புக் கல்வி சேர்க்கை: திறந்தநிலைப் பல்கலை. அறிவிப்பு

DIN


இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.- சிறப்புக் கல்வி திட்டம்) சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்த
நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அரசாணை எண்.56, 2012- இன் படி, இந்த சிறப்புக் கல்வித் திட்ட பி.எட். படிப்பு, வழக்கமான பி.எட். (பொதுக் கல்வி) படிப்புக்கு இணையானது மட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்புக்கும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும்.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ.) ஆகியவற்றின் அங்கீகாரம் இந்தப் படிப்புக்குப் பெறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இந்த பி.எட். படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24306600, 24306617 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா்: எம்எல்ஏ வானதி சீனிவாசன்

மேம்பாலத்தின் அணுகுசாலையில் வெடிப்பு: தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

SCROLL FOR NEXT