தமிழ்நாடு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஆட்சியர் நடவடிக்கை

DIN

சுகாதாரமற்ற முறையில் இயங்கியதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தார்.  

இந்நிலையில், மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்த ஆட்சியர், வளாகத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் இருப்பதை கண்டறிந்தார். பின்னர் வளாகத்தில் மது பாட்டில்கள் கிடந்ததால் அது மருத்துவமனையா? மதுபானக் கடையா? என ஆட்சியர் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து சுகாதார சீர்கேட்டுடன் இருந்ததாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அந்த அபராதத் தொகையை அரசு பணத்தில் இருந்து கட்டாமல், பணியாளர்களிடம் இருந்து வசூலித்து கட்ட வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டார். 

தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் நிலையில், அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது மட்டுமல்லாமல் மது பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT