தமிழ்நாடு

தீபாவளியன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!  

DIN

சென்னை: தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு ஞாயிறன்று பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக் கூடும். எனவே அன்று துவங்கி 8-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வலுப்பெறும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.  

இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.  நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

பொதுவாக ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT