தமிழ்நாடு

கோவையில் காய்ச்சலுக்கு 4 பேர் சாவு

DIN

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ், மூளை, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
 கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் முத்துகுமாருக்கு (52), பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
 பொள்ளாச்சி, சித்தூரைச் சேர்ந்தவர் ரத்தினம் (60). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
 கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி, ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (52) மூளைக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை உயிரிழந்தார். ஈரோடு, திண்டல் புதுக் காலனி, பி.கே.என்.நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி (62). வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT