தமிழ்நாடு

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

DIN

அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அதிமுக தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கைகளால் கவரப்பட்டு, தனது அறிவு, ஆற்றல் அனைத்தையும் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர். கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர், தனது 82-வது பிறந்த தினத்தை சனிக்கிழமை கொண்டாடினார்.
 அவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் என்று அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT