தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசனப் பகுதிகளில் நீருக்கான தேவை அதிகரித்ததால் சனிக்கிழமை காலை முதல் பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,038 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT