தமிழ்நாடு

தீவிரமடைகிறது கஜா புயல்

DIN


வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு, அதையொட்டிய மத்திய கிழக்கு தெற்கு வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு, வடகிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு, தென்மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். தொடர்ந்து மேற்கு, தென்மேற்குத் திசையில் நகரும்போது சற்று வலுவிழந்து மீண்டும் புயலாக மாறி வியாழக்கிழமை பிற்பகலில் பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், புயல் காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படுவதுடன், அலைகள் ஒரு மீட்டர் உயரம் வரை எழும்பும். அதனால் மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்களில் மரங்கள், பயிர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. குடிசை வீடுகள், மின்சாரம், தொலைத் தொடர்புகளும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT