தமிழ்நாடு

நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு

DIN


லட்சத்தீவு அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்டம், தூத்தூரை சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்குச் சொந்தமான லூமானுஸ் என்ற விசைப்படகில் நீரோடி, தூத்தூர், மற்றும் கேரள மாநிலம் கருங்குளம், வடமாநில மீனவர்கள் உள்பட 13 பேர், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கர்நாடக மாநிலம், மங்களாபுரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 9ஆம் தேதி விசைப்படகு பழுதானது. இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலர் சர்ச்சிலிடம், லட்சத்தீவு கடலில் தவித்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை விக்ரம் என்ற கப்பல் உதவியுடன், மீனவர்கள் 13 பேரையும் பத்திரமாக மீட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT