தமிழ்நாடு

பட்டாசு தொழிலை காக்க நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன்

DIN


பட்டாசு தொழிலைப் பாதுகாக்க சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,000-த்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளன. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், பட்டாசு ஆலைகளை பாதிப்புக்கு உள்ளாக்கினால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை உரிய முறையில் அணுகி இருக்க வேண்டும். 
சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, அந்தத் தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை உள்ளது. தமிழக கலாசார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT