தமிழ்நாடு

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கஜா புயலை முன்னிட்டு தமிழக மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கஜா புயல் கடுமையாக இருந்தாலும் மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 333 மீனவக் கிராமங்களில் படகுகளுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. 

புயலால் சில நாட்டுப் படகுகள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன. மீனவர்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வுசெய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவக் கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று பாதிப்பை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பர். 

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எதிர்க்கட்சிகளே பாராட்டும்வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT