தமிழ்நாடு

புயல் செய்திகளைப் பார்த்து பெருமூச்சு விட்ட சென்னைவாசிகளுக்கான பிரத்யேக செய்தி இது

வங்கக் கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் தமிழகத்தில் நாகை உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப்போட்டுவிட்டு கேரளா சென்று விரைவில் அரபிக் கடலில் ஜல பிரவேசம் செய்ய உள்ளது.

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் தமிழகத்தில் நாகை உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப்போட்டுவிட்டு கேரளா சென்று விரைவில் அரபிக் கடலில் ஜல பிரவேசம் செய்ய உள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

புயல் மற்றும் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் தமிழகத்தைக் கடந்து போன கஜா புயலின் கோரத் தாண்டவம் பற்றிய செய்திகள். இதைத்தான் கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் இதேதான் நீடிக்கிறது. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பொழுதுக்கும் தொலைக்காட்சி முன்பு புயல் பற்றி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னைவாசிகளின் மன ஓட்டத்துக்கு, தருமி நாகேஷ் பாணியில் இதெல்லாம் நமக்கில்லை நமக்கில்லை என்ற வசனம்தான் சரியாக பொருந்தியது.

அடித்தது என்னவோ புயலாகவும், பெய்தது என்னவோ கன மழையாக இருந்தும் நமக்கில்லையே, சென்னையை விட்டுவிட்டதே என்று பள்ளிச் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை புலம்பித் தள்ளினர்.

இதற்கெல்லாம் ஆறுதல் சொல்லும் வகையில் இன்று வானிலை அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்  சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார்.

அதாவது, தற்பொழுதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் 18ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி 19ம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் என்பதே அந்த செய்தி.

எனவே கஜா புயலைப் பார்த்து ஏங்கிய சென்னைவாசிகளின் மனம் குளிர வைக்க விரைவில் வருகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை. இது சென்னையை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

SCROLL FOR NEXT